LATEST NEWS
பல வருடங்களாக தேடியும் கண்ணில் படாத விவேக் அப்பாவின் புகைப்படம்… அவரின் தந்தை யார் தெரியுமா..??
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக பலம் வந்தவர் விவேக். தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் பேவரட் காமெடியனாக திகழ்ந்தவர். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக இருந்து வந்தவர். இவர் அங்கையா மற்றும் மணியம்மாள் தம்பதியரின் மகன் ஆவார். இவர் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தவர். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கியவர் நடிகர் விவேக். அவர் இந்த மண்ணை விட்டு சென்றாலும் மக்களின் மனதை விட்டு இன்னும் செல்லவில்லை. இவர் இறுதியாக சங்கர் இயக்கத்தில் தயாரான இந்தியன் 2 திரைப்படத்தில் முதல்முறையாக உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் படம் முடிவதற்கு முன்னரே அவர் உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக விவேக் அவரின் அப்பா புகைப்படத்தை தேடி வந்துள்ளார். தற்போது மாறாக அவர் நம்முடன் இல்லாத நிலையில் அவரின் தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் பார்க்கும்போது அவரும் விவேக் போல தான் உள்ளார்.
இந்த புகைப்படம் சென்னை பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு நபர் மூலமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக விவேக் தேடிய புகைப்படத்தை வெளியிட்டவர் விவேக் இல்லை என கண்ணீருடன் கருத்தும் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
