LATEST NEWS
‘சபாபதி’ சந்தானத்தின் ரீல் தங்கையா இது?… ஆள் அடையாளம் தெரியலையே… இணையத்தை தெறிக்க விடும் போட்டோஸ்…
பேரன்பு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. சின்னத்திரையில் இவருக்கு மிகவும் பெயர் பெற்றுக்கொடுத்த ஒரு சீரியல் என்றால் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் சீரியல் என்று கூறலாம்.
அந்த சீரியலில் ஹீரோயினின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நீவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது இவருக்கு இன்னும் பிரபல பலத்தைக் கொடுத்தது. இவருக்கு தன்னுடைய அம்மா என்றால் உயிராம்.
அதனால்தான் வைஷ்ணவி என்ற பெயருக்கு பின்னால் தன்னுடைய பெயருக்கு பின்னால் அருள்மொழி என்று தன்னுடைய அம்மா பெயரை சேர்த்துக் கொண்டுள்ளாராம். பொதுவாகவே நடிகைகள் தங்களுடைய அப்பா பெயரையே தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இவர் தன்னுடைய தாயின் பெயரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த சபாபதி திரைப் படத்தில் சந்தானத்தின் தங்கையாக வைஷ்ணவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதில் வைஷ்ணவி கை தேர்ந்தவராக இருக்கிறார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹீரோவாக நடித்த மாயன் என்ற கதாபாத்திரத்தின் தங்கையாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார்.
சீரியலில் குடும்பப் பாங்காக நடித்தாலும் நடிகை வைஷ்னவி மிகவும் மாடர்ன் ஆனவர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய நடிகை வைஷ்ணவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘சபாபதி’ சந்தானத்தின் ரீல் தங்கையா இது?… ஆள் அடையாளம் தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
