உனக்கு எனக்கும் இருக்கும் பழக்கம் இந்த ஒரு படம் தானா?… விஜய் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த இயக்குனர் நெல்சன்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

உனக்கு எனக்கும் இருக்கும் பழக்கம் இந்த ஒரு படம் தானா?… விஜய் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த இயக்குனர் நெல்சன்..!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நெல்சன். இவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் மிக வெற்றி பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் குறித்து யூடுப் சேனல் ஒன்றுக்கு நெல்சன் அளித்த பேட்டியில், விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் கடுமையான விமர்சனங்கள் பற்றி பேசியுள்ளார்.பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோது விஜய் இடம் சார் என் மேல உங்களுக்கு ஏதும் கோபமா என்று கேட்டேன்.

Advertisement

உடனே அவர் என் மேல எனக்கு என்ன கோபம் என்று கேட்டபோது படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருகிறதே என்று சொன்னேன். அதற்கு அவர் நான் எதுக்கு உன் மீது கோபமாக இருக்கப் போகிறேன் உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா? நீ இப்படி என்னிடம் கேட்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. இது இல்லாவிட்டால் என்ன இன்னொரு படம் எடுக்கப் போகிறோம். அவ்வளவுதான் என்று கூறிய நிலையில் நெல்சனின் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in