VIDEOS
அட பாரதிகண்ணம்மா ஃபரீனாவா இது?.. தமன்னாவுடன் அந்தப் பாட்டுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட வைரல் வீடியோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்த ரசிகர்கள் மத்திய பிரபலமான ஃபரீனாவின் காதலர் தின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஃபரினா ஆசாத். இந்த சீரியலில் வில்லத்தனமான ரோலாக இருந்தாலும் இந்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கர்ப்பமானதால் அவர் சிறைக்குச் செல்வது போல கதை மாற்றப்பட்டு பிறகு குழந்தை பிறந்தது மீண்டும் அதே சீரியலில் நடிக்க தொடங்கினார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா இரண்டாவது சீசனிலும் இவர் வில்லியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் நடிகை தமன்னா ஆட்டம் போட்ட காவலா பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்றை ஃபரீனா பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க