CINEMA
“ராத்து ராசன் வந்தாச்சு…” சூர்யாவின் ‘கருப்பு’ பட மூன்றாவது சிங்கிள் வெளியீடு… குஷியில் ரசிகர்கள்…!!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம், வரும் மே 14-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ராத்து ராசன்’ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிரடியான பாடல் தற்போது சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு டிரெண்டாகி வருகிறது.
சூர்யா – திரிஷா கூட்டணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்திருப்பதும், ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கம் என்பதும் இப்படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் இதுபோன்ற அறிவிப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. மே மாதம் கோடை விடுமுறை விருந்தாக வரவுள்ள ‘கருப்பு’, வசூல் ரீதியாகப் புதிய சாதனைகளை படைக்கும் எனத் திரையுலகினர் கணித்துள்ளனர்.
