CINEMA
அடேங்கப்பா..! இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா..? “வசூலில் மாஸ் காட்டும் மைக்கேல் திரைப்படம்…!”
நடனத்தின் சக்கரவர்த்தி என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘மைக்கேல்’. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தனது நடனத்தால் கட்டிப்போட்ட ஒரு கலைஞனின் வாழ்வியலைப் படமாக்கியிருப்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தோனி, சச்சின் போன்ற ஜாம்பவான்களின் பயோபிக் வரிசையில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 24-ம் தேதி வெளியான இத்திரைப்படம் உலகளவில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சுமார் 1,450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மைக்கேல் ஜாக்சனின் உலகளாவிய செல்வாக்கு இந்தப் படத்தின் பிரம்மாண்ட வசூலுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிலும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் இப்படம் 19 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு வெளிநாட்டு பயோபிக் படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பது திரைத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
