CINEMA
தாலி கட்டுறேன்னு சொல்லிட்டு…” பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பாய்ந்த பகீர் குற்றச்சாட்டு.. இன்ஸ்டா பிரபலம் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது இன்ஸ்டாகிராம் பிரபரலமான வஹிதா அக்தர் என்ற பெண்மணி, தன்னை ஏமாற்றிவிட்டதாகப் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், முத்துக்குமரன் தனக்குத் தாலி கட்டுவதாகக் கூறி ஆசை வார்த்தைகள் பேசி, காதலித்து ஏமாற்றியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தான் இந்த முடிவை எடுப்பதாகவும் வஹிதா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாத்திரைகள் உட்கொண்ட அவர், நல்வாய்ப்பாகத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார்.
மேடைகளிலும் பொதுவெளிகளிலும் பெண்ணியம் மற்றும் முற்போக்குக் கருத்துக்களைப் பேசும் ஒரு நபர், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெண்ணின் உணர்வுகளோடு விளையாடி, தனது தேவைக்காகப் பயன்படுத்திவிட்டுச் சென்றுள்ளார் என்ற குற்றச்சாட்டு நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணிற்கு நம்பிக்கையையும் நம்பிக்கையான எதிர்காலத்தையும் கொடுத்துவிட்டு, தேவை முடிந்ததும் விலகிச் செல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும், இவரா தன்னை ஒரு தமிழ் அறிஞராகக் காட்டிக் கொள்கிறார் என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள முத்துக்குமரன், “வஹிதாவும் நானும் நல்ல நண்பர்கள்; அவர் ஏன் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை, அதுகுறித்துத் தான் தெளிவு கேட்டு வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
