“ஒழுங்கா இல்ல.. கொன்னு போட்டு போயிடுவேன்..” ஒரே ஒரு வார்த்தை மிரட்டல்… ஆத்திரமடைந்து 21 வயது ஏசி மெக்கானிக்கை கொடூரமாக வெட்டிய பள்ளி மாணவர்கள்..! திடுக்கிடும் பின்ணணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒழுங்கா இல்ல.. கொன்னு போட்டு போயிடுவேன்..” ஒரே ஒரு வார்த்தை மிரட்டல்… ஆத்திரமடைந்து 21 வயது ஏசி மெக்கானிக்கை கொடூரமாக வெட்டிய பள்ளி மாணவர்கள்..! திடுக்கிடும் பின்ணணி..!!

Published

on

சென்னை மயிலாப்பூரில் நண்பர்களை சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் சத்தியசீலன் என்பவர், மர்ம கும்பலால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பாலாஜி நகரைச் சேர்ந்த இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் வசித்தபோது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால், பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் குடும்பத்தினர் வேளச்சேரிக்கு குடிபெயர்ந்தபோதிலும், மயிலாப்பூரில் உள்ள தனது நண்பர் சபரியை சந்திப்பதற்காக சத்தியசீலன் அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (அக் 06) மாலை சுமார் 6 மணியளவில் சபரியை சந்திப்பதற்காக மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவுக்கு வந்த சத்தியசீலன், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் திடீரென அவரை வழிமறித்து, கத்தியால் தலை, கை மற்றும் தொண்டை பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த சத்தியசீலனை அவரது நண்பர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

Advertisement

போலீசாரின் விசாரணையில், பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் தனக்கு ஆதரவாக சத்தியசீலனை அழைத்துச் சென்றதும், அங்கு சத்தியசீலன் எதிர் தரப்பு மாணவர்களை “ஒழுங்கா இல்ல.. கொன்னு போட்டு போயிடுவேன்” என மிரட்டியதும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சத்தியசீலனை தாக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து சாய்நாத், விரோஷன், நிதிஷ் ஆகிய கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் கல்லூரி மாணவர்கள் சிறையிலும், பள்ளி மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in