“அடேய் முத்துக்குமரா…  ஜென் Z-க்கு ஒழுக்கமே கிடையாத…” வஹிதா விவகாரத்தில் இன்றைய இளைஞர்களை விளாசிய கவிஞர் தாமரை..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அடேய் முத்துக்குமரா…  ஜென் Z-க்கு ஒழுக்கமே கிடையாத…” வஹிதா விவகாரத்தில் இன்றைய இளைஞர்களை விளாசிய கவிஞர் தாமரை..!!

Published

on

பட்டிமன்ற பேச்சாளரும், பிக் பாஸ் பிரபலமுமான முத்துக்குமரன் மீது, இன்ஸ்டாகிராம் பிரபலம் வஹிதா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தனிமையில் இருந்துவிட்டு ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனைப் பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வரும் வஹிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் மாத்திரைகளுடன் வீடியோ வெளியிட்டு முத்துக்குமரனால் தான் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். அதன்பிறகு அந்த வீடியோக்களை நீக்கிவிட்டு தான் உயிர்பிழைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், முத்துக்குமரனுடன் இருக்கும் வீடியோ மற்றும் அவர்களின் தொலைபேசி உரையாடல் ஆடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டார். மறுபுறம், முத்துக்குமரன் தன் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியது.

இந்த விவகாரம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை தனது முகநூல் பக்கத்தில் ‘பேசி மயக்கும் கலை’ என்ற தலைப்பில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அடேய் முத்துக்குமரா… இந்தப் பெண் இப்படி அப்பட்டமாய் ஊடகத்தில் போட்டு உடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாய் அல்லவா? இது முத்துக்குமரனைப் பற்றியது மட்டுமல்ல, பேசி மயக்கும் அனைத்துக் கில்லாடி அயோக்கியர்களுக்குமானது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ஆண், பெண் இருபாலரும் இந்த கலையில் வல்லவர்களாக இருப்பதாகவும், மதம், சாதி, மொழி, ஆன்மிகம், அரசியல், இலக்கியம் போன்ற பல்வேறு சித்தாந்தங்களை அல்லது கருத்துக்களைப் பயன்படுத்தி இரையை நம்பவைக்கும் இந்த மயக்கும் பேச்சுக்கலை குறித்து அவர் விரிவாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தொடர்ந்து தனது பதிவில் இன்றைய தலைமுறை இளைஞர்களின் உறவு முறை கலாச்சாரம் (Relationship, Situationship, One-Night Stand, Live-in உள்ளிட்ட சொற்கள்) மற்றும் அடிப்படை ஒழுக்கமின்மை குறித்தும் தாமரை கவலை தெரிவித்துள்ளார். திருமணத்தை ஒரு கெட்ட வார்த்தையாகவும், எதற்கும் கட்டுப்படாத போக்கையும் கடுமையாகச் சாடியுள்ள அவர், நலிந்துபோன நடுத்தரத் தலைமுறையின் நிலையையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு குழந்தையை வைத்திருக்கும் இந்தப் பெண் துணிச்சலாக முத்துக்குமரனைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருப்பது வியப்பளிப்பதாகவும், “இதற்கு ஒரு விளக்கம் கொடுப்பாயல்லவா, அப்போது உன்னது அந்தத் தமிழ்நாக்கு எப்படி சுழல்கிறது என்று பார்க்க ஆவலோடு இருக்கிறேன்” என்றும் கூறி முத்துக்குமரனை நோக்கி அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். இவரது இந்தப் பதிவிற்கு இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in