CINEMA
பூஜா ஹெக்டேவின் “ரகசியக் காதல்”..? தன்னை விட வயது குறைந்த பாலிவுட் நடிகருடன் டேட்டிங் போட்டோஸ்.. இணையத்தில் வைரலாகிறது…!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, தன்னை விட வயது குறைந்த பாலிவுட் நடிகர் ஒருவருடன் காதலில் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் இவர், கடந்த சில காலமாகத் தொடர் தோல்விகளால் படங்களில் குறைவாகவே நடித்து வருகிறார்.
தற்போது 35 வயதாகும் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவை நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களது நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ரோஹன் மெஹ்ரா நடிகை பூஜாவை விட ஒரு வயது குறைந்தவர் என்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலும், பூஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்தச் செய்திகள் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.
