CINEMA
சினிமாவுக்கு எண்ட் கார்டு போட்ட விஜய்…!”அண்ணே.. லியோ 2 பண்ணிடுங்கண்ணே…!” -தலைமைச் செயலகத்தில் லோகேஷ் கனகராஜ்.. வைரலாகும் அந்த ஒரு புகைப்படம்! பின்னணியில் இருக்கும் ரகசியம்…!
லியோ’ படத்தின் வெற்றி விழாவில், “விஜய் முதலமைச்சரானால் லோகேஷ் கனகராஜுக்கு என்ன துறை கொடுப்பீர்கள்?” என்ற கற்பனையான கேள்விக்கு, “போதைப்பொருள் ஒழிப்புத்துறை கொடுப்பேன்” என்று விஜய் பதிலளித்திருந்தார். அதன்பின், விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நடந்த தேர்தலில் லோகேஷ் ஓட்டுப்போட வரவில்லை என்ற சர்ச்சை வெடித்த நிலையில், தற்போது தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளைக் குவித்தவர் லோகேஷ் கனகராஜ். எனினும், ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்ததால், சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் லோகேஷ், விரைவில் அப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.”முதலமைச்சர் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, தளபதி ரசிகர்கள் ‘அண்ணே.. எப்படியாவது லியோ 2 படம் பண்ணிடுங்கண்ணே’ என கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.”
அரசியலில் முழு மூச்சாக இறங்கியுள்ள விஜய், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும், அவரது கடைசிப் படம் ‘ஜன நாயகன்’ தான் என்றும் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால், ‘ஜன நாயகன்’ படத்தின் சென்சார் பஞ்சாயத்துகள் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், லோகேஷின் இந்தச் சந்திப்பு ‘லியோ 2’ மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீண்டும் தூண்டியுள்ளது. சினிமாவுக்கு விஜய் முழுக்கு போட்டாலும், லோகேஷ்-விஜய் கூட்டணியின் மேஜிக் மீண்டும் இணையுமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்துள்ளனர்.
