LATEST NEWS
“என் புருஷனை காணோம்…!”கடைசியாக வீட்டிற்குள் நுழைந்த கணவன்…!கள்ளக்காதலனுக்காக கணவனை காவு வாங்கிய நர்ஸ் கல்பனா…!போலீசிடமே அழுது நாடகமாடிய மனைவி…!சிசிடிவியில் சிக்கிய உண்மை…!
தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, செவிலியரான மனைவி தனது காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, சொந்த நிலத்திலேயே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியைச் சேர்ந்த 42 வயதான எலக்ட்ரீசியன் முத்யம் ரெட்டி என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். இவருக்கும், தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 35 வயது கல்பனா என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த கல்பனாவிற்கு, அங்கு உடன் பணியாற்றிய சிண்ட்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவாக மாறியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இருவரும் நெருங்கிப் பழகி, அடிக்கடி வெளியில் சுற்றித் திரிந்துள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த முத்யம் ரெட்டி, அவரைக் கண்காணித்தபோது கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனால் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு, முத்யம் ரெட்டி தனது மனைவியைக் கண்டித்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.”கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழத் திட்டமிட்ட கல்பனா, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, கடந்த மே 16ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்யம் ரெட்டியை, கல்பனாவும் அவரது காதலன் சிண்ட்டுவும் சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர்.”
கொலைக்குப் பின், முத்யம் ரெட்டியின் உடலை யாருக்கும் தெரியாமல் மறைக்கத் திட்டமிட்ட இருவரும், ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து முத்யம் ரெட்டியின் சொந்த நிலத்திலேயே பெரிய குழி தோண்டி உடலைப் புதைத்துள்ளனர். மறுநாள் காலை, எதுவுமே தெரியாதது போல கல்பனா காவல் நிலையம் சென்று, தனது கணவரைக் காணவில்லை என்று நாடகமாடிப் புகாரளித்துள்ளார். போலீசாரும் உறவினர்களும் முத்யம் ரெட்டியைத் தேடி வந்த நிலையில், அவர் கடைசியாக வீட்டிற்குள் சென்றது மட்டும் அப்பகுதியின் சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் கல்பனாவைத் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று நிலத்தில் புதைத்ததை கல்பனா ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில், நிலத்தில் புதைக்கப்பட்ட முத்யம் ரெட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கல்பனா மற்றும் அவரது கள்ளக்காதலன் சிண்ட்டு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
