LATEST NEWS
“தனிமையில் அக்கா கணவருடன் நெருங்கி பழக்கம்…” 22 வயது மகளை கண்டித்த பெற்றோர்… அந்த காட்சியை கண்டு ஷாக்கான இளம்பெண்… கடைசியில் நடந்த கொடூர சம்பவம்…!!
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயத் தம்பதியான சிவன் (60), வைரம்மாள் (57) ஆகியோரின் இளைய மகள் அமுதா (22). இவருக்குத் திருமணமாகாத நிலையில், தனது அக்கா கணவருடன் தவறான பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில் இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இவர்களின் இந்தத் தகாத உறவைக் கண்டுபிடித்த அக்கா, இதுபற்றிக் பெற்றோரிடம் கூறி அமுதாவைக் கண்டிக்கச் செய்துள்ளார். ஆனாலும் அமுதா தனது மாமாவுடனான தொடர்பைக் கைவிடாமல் தொடர்ந்து வந்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர் கடந்த மே 30-ஆம் தேதி அமுதாவை மிரட்டிப் பூச்சி மருந்தைக் குடிக்க வைத்துள்ளனர். அதிலும் அவர் உயிர் பிழைக்கப் போராடவே, அவதிப்பட்ட மகளின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
மறுநாள் காலை தங்களது மகள் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாக நாங்குநேரி காவல் துறையினருக்குப் பெற்றோர் நாடகமாடித் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்ட போலீசார், அமுதாவின் கழுத்தில் இருந்த நகக் கீறல்களைப் பார்த்துச் சந்தேகமடைந்து பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், குடும்பக் கவுரவத்திற்காகத் தங்களது மகளைத் தாங்களே விஷம் கொடுத்துக் கழுத்தை நெரித்துக் கொன்றதைச் சிவனும் அவரது மனைவியும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பெற்ற மகளையே கொலை செய்த குற்றத்திற்காக அந்தத் தம்பதியினரை நாங்குநேரி போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
