LATEST NEWS
“எனக்கு 2 பேரும் வேணும்…” பெண் பிள்ளைகளுடன் கெஞ்சிய முதல் மனைவி… விடாப்பிடியாக நின்ற வாலிபர்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்குச் சுமதி (26) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அலைபேசியில் யாருடனோ ரகசியமாகப் பேசியது தொடர்பாக தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், சடையாண்டி திடீரெனக் காணாமல் போனார். சுமதி கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சடையாண்டி தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து, புத்தூர் பிச்சம்பட்டியைச் சேர்ந்த நாகேஷ்வரி (21) என்ற இளம்பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது அம்பலமானது.
இதையடுத்து மூன்று தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்துப் போலீசார் விசாரித்த போது, தனது இரு மனைவிகளையும் தன்னுடன் அனுப்பி வைத்தால் ஒன்றாக வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சடையாண்டி கூறியது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது. நாகேஷ்வரியும் அவருடன் செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், முதல் மனைவி சுமதி தனது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகக் கணவரைத் தன்னுடன் அனுப்புமாறு கண்ணீருடன் மன்றாடினார். இறுதியில், முதல் மனைவி இருக்கும்போது மறுமணம் செய்வது சட்டப்படி குற்றம் எனச் சடையாண்டியை எச்சரித்த போலீசார், நாகேஷ்வரிக்குப் புத்திமதி கூறி அவரது பெற்றோருடன் அனுப்பியதோடு, சடையாண்டியை முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
