LATEST NEWS
“என்ன விட்ருங்க…” அலறிய பெண்…! ஆடைகளை கிழித்து கல்லால் அடித்த கணவன்…. குழந்தையுடன் சென்ற மனைவியை தரதரவென இழுத்து வந்து அராஜகம்… பகீர் பின்னணி…!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவருக்கும், தனியார் ஆலையில் பணிபுரியும் நந்தினி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு காரணமாக, நந்தினி தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தென்னங்குடிபாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதனால் கோபமடைந்த கணேசன், மாமியார் வீட்டிற்குச் சென்று நந்தினியையும் குழந்தையையும் வலுக்கட்டாயமாகத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில், நந்தினியின் அலறல் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் அவரை உப்பேடை பகுதியில் உள்ள அய்யனார் கோயில் ஏரிக்குக் கணேசன் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து நந்தினியின் ஆடைகளைக் கிழித்து எறிந்ததோடு, கல்லால் அவரது தலை மற்றும் கால்களில் கணேசன் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த அராஜகத் தாக்குதலில் இருந்து தப்பிய நந்தினி, அருகில் இருந்த ஒரு வீட்டில் மாற்றுத் துணியைப் பெற்று அணிந்து கொண்டு, தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த கணேசனை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்த இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
