LATEST NEWS
“மருமகளின் வாட்ஸ்அப்பிற்கு ஆபாச வீடியோ…” தொடர்ந்து தொந்தரவு அளித்த மாமனார்… கூடவே, மாமியாரும்,கணவரும்…. அதிர்ச்சி சம்பவம்…!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு மறுமணம் முடிந்து, அவர் தனது இரண்டாவது கணவருடன் வசித்து வந்துள்ளார். திருமணத்தின் போது போதிய சீர்வரிசைகளைக் கொண்டு வரவில்லை என கூறி, அவரிடம் கூடுதலாக 30 சவரன் தங்க நகைகளைக் கேட்டு அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரும் சேர்ந்து அடிக்கடி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையான வரதட்சணைக் கொடுமைகளைச் செய்து வந்துள்ளனர்.
இந்த அவலநிலை நீடித்த சூழலில், அந்தப் பெண்ணின் அலைபேசிக்கு அவரது மாமனார் ஆபாசக் காணொளிகளை அனுப்பி, அவருக்குத் தொடர்ந்து மன உளைச்சலையும் பாலியல் ரீதியான தொல்லைகளையும் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாமனாரின் இந்த அநாகரிகமான செயலால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அந்த இளம்பெண், உடனடியாகச் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரிப் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த பெண் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் விளைவாக, மருமகளுக்குப் பாலியல் அத்துமீறல் கொடுத்த மாமனாரையும், கூடுதல் நகை கேட்டு வரதட்சணைக் கொடுமையில் ஈடுபட்ட அந்தப் பெண்ணின் கணவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர். குடும்பத்தினரே பெண்ணிற்கு இத்தகைய கொடுமைகளை இழைத்துக் கைது செய்யப்பட்டுள்ள விபரீதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
