“5,000 பள்ளிகளில் ஏ.ஐ மற்றும் கோடிங்…” அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட மெகா அறிவிப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“5,000 பள்ளிகளில் ஏ.ஐ மற்றும் கோடிங்…” அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட மெகா அறிவிப்பு…!!

Published

on

தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போதைய ஆசிரியர்களுக்கு உயர்தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தொழில்நுட்பப் பயனாளர்களாக மட்டுமின்றி உருவாக்குபவர்களாகவும் மாற வேண்டும் என்ற நோக்கில் அரசுப் பள்ளிகள் இன்குபேஷன் மையங்களாக மாற்றப்படும்.

மேலும் கல்வி வளாகங்களுக்குள் சாதி, மத அடையாளங்களுக்கும், பிரிவினைவாத கருத்துகளுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு, பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் தூய்மைப் பராமரிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, மாணவர்களை நல்வழிப்படுத்தவும் போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்தந்தப் பள்ளிகளின் சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள் தூதர்களாக  அழைக்கப்படுவர்.

Advertisement

தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கும் முறையில் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு, லஞ்ச லீக்கேஜ் முறை முற்றிலும் வெளிப்படையாக்கப்பட்டுள்ளதால் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களின் கட்டண அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் பள்ளிகளின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாகத் தரம் பிரிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படும். அனைத்து விதிகளையும் தகுதிகளையும் முறையாகப் பூர்த்தி செய்தால் மட்டுமே பள்ளிகளைத் தரம் உயர்த்தவும், புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்படும் என்றும், எவ்வித அவசர முடிவுகளுக்கும் இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in