LATEST NEWS
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை… சவாரனுக்கு ரூ.2400 உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
மத்திய கிழக்கு உலக நாடுகளில் நிலவி வரும் அசாதாரணப் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகக் கச்சா எண்ணெயின் மதிப்பு சர்வதேச அளவில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த உலகளாவிய பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பல்வேறு நாடுகள் வட்டி விகிதங்களை மேலும் சில காலத்திற்கு உயர்த்தி வைக்கத் திட்டமிட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் தங்களின் கவனத்தைத் தங்கத்தின் மீதிருந்து திருப்பியுள்ளனர்.
இதன் காரணமாக இம்மாதத் தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வந்தது; குறிப்பாகக் கடந்த 1-ஆம் தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ₹8,000 வரை வீழ்ச்சியடைந்து நேற்றைய தினம் ஒரு சவரன் தங்கம் ₹1,08,000-க்கு விற்பனையானது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹300-ம், சவரனுக்கு ₹2,400-ம் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ₹1,10,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று சற்றே ஏறுமுகத்தைக் கண்டு, கிராமுக்கு ₹5 உயர்ந்து ஒரு கிராம் ₹265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,65,000-க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் ஒரு லட்சத்து பத்தாயிரத்தைத் தாண்டியிருப்பது நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
