துக்க வீட்டில் நடந்த மோதல்…இதை பார்க்கக் கூடாதுனுதான் அந்த மனுஷன் போயிட்டாரோ?…அரசு மரியாதைக்கு நடுவே நடந்த குடும்ப சண்டை… சமயோசிதமாகத் தடுத்து நிறுத்திய நடிகை ராதிகா…! – cinefeeds
Connect with us

CINEMA

துக்க வீட்டில் நடந்த மோதல்…இதை பார்க்கக் கூடாதுனுதான் அந்த மனுஷன் போயிட்டாரோ?…அரசு மரியாதைக்கு நடுவே நடந்த குடும்ப சண்டை… சமயோசிதமாகத் தடுத்து நிறுத்திய நடிகை ராதிகா…!

Published

on

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அரசு மரியாதையுடன் அவரது உடல் தேனியில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். வயது மூப்பு காரணமாக அவர் மறைந்தார் என்று கூறப்பட்டாலும், கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணம் அவரை மீளாத்துயரில் ஆழ்த்தியதே இதற்குக் காரணம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகனின் இழப்பால் மனதளவில் உருக்குலைந்து போயிருந்த பாரதிராஜா, கடந்த 10ஆம் தேதி காலமானார். அவரது ஆசைப்படியே தேனியில் உள்ள பண்ணை வீட்டில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

பாரதிராஜாவின் உடலுக்கு அருகில் இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்த வேளையில், அவரது குடும்பத்தினரிடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பாரதிராஜாவின் உடலுக்கு அருகில் அமர்ந்திருந்த மனோஜ் பாரதிராஜாவின் மகளிடம், பாரதிராஜாவின் மகள் (அத்தை) ஏதோ கூற, அதனால் கோபமடைந்த மனோஜின் மகள் இருக்கையை விட்டு எழுந்து செல்ல முயன்றார். அப்போது அவரது கையைப் பிடித்து அத்தை சமாதானம் செய்ய முயல, கோபத்தில் கையைத் தட்டிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மனோஜின் மகள். துக்க வீட்டில் மருமகளும் அத்தையும் பொதுவெளியில் மோதிக்கொண்ட இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

குடும்பத்தினரின் இந்த வாக்குவாதம் பெரிய பிரச்னையாக மாறுவதைக் கவனித்த நடிகை ராதிகா சரத்குமார், உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு அவர்கள் அருகே சென்றார். பாரதிராஜாவின் மகளிடம் இரு கைகளையும் கூப்பிக் கெஞ்சி, பேசி சமாதானம் செய்து, அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குடும்பத்திற்குள் இருக்கும் ஒற்றுமையின்மை பாரதிராஜாவின் ஆன்மாவை வருத்தமடையச் செய்யும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், துக்க வீட்டில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் சமயோசிதமாகத் தடுத்த நடிகை ராதிகாவின் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in