“காட்டில் அரைகுறை ஆடை…” அழுகிய நிலையில் இருந்த பெண்…. கையில் இருந்த “அந்த” பெயர்…! பதறவைக்கும் பகீர் பின்னணி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காட்டில் அரைகுறை ஆடை…” அழுகிய நிலையில் இருந்த பெண்…. கையில் இருந்த “அந்த” பெயர்…! பதறவைக்கும் பகீர் பின்னணி…!!

Published

on

கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் சுகுணாபுரம் அருகேயுள்ள மஞ்சுப்பள்ளம் காட்டுப்பகுதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் அரைகுறை ஆடையுடன் புதருக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உயர் அதிகாரிகள் உடலைக் கைப்பற்றினர். சடலம் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என்பதை உடனடியாகக் கண்டறிய இயலவில்லை. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த முக்கிய சான்றுகள் சேகரிக்கப்பட்டன.

இச்சம்பவம் மதுக்கரை காவல் எல்லைக்கு உட்பட்டது என்பதால், தற்போது அங்குள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் ஒரு கையில் ‘ஜெகன்’ என்ற பெயரும், அதன் அருகில் இதய வடிவமும் பச்சை குத்தப்பட்டுள்ளதுடன், மற்றொரு கையில் ‘S’, ‘J’ ஆகிய எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. அந்த பெண் அரைகுறை ஆடையுடன் சடலமாக மீட்கப்பட்டதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்து வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண்ணின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in