CINEMA
அந்த நடிகை மாதிரி என்கிட்ட எதிர்பார்க்காதீங்க, என்னால அது முடியாது – கட்டா குஸ்தி 2 பட நிகழ்ச்சியில் வெளிப்படையாக சொன்ன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
நடிகர் விஷ்ணு விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்த கட்டா குஸ்தி படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் வருகிற ஜூலை 3ம் தேதி கட்டா குஸ்தி 2ம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன் என்று கேள்வி கேட்கின்றனர்.
நான் நடிக்கும் கதாபாத்திரம் பெரியதா சிறியதா என்பது முக்கியமல்ல. அந்த கதை திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம். எல்லோராலும் ராஷ்மிகா மந்தனா ஆக முடியாது. முழு நீள கமர்சியல் கதாநாயகி கேரக்டர்களை அவர் மிகவும் நளினமாக செய்கிறார். அந்த மாதிரி நடனம் ஆடவும் முழுமையான கமர்சியல் ஹீரோயினாகவோ என்னால் இருக்க முடியாது. அது மிகவும் கடினமான விஷயம் என்று ஐஸ்வர்யா லட்சுமி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
