576 கிராம் நகையோடு பயணம்…! நள்ளிரவில் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அரசு ஏசி பஸ்சில் நடந்த துணிகரம்…. போலீஸ் விசாரணை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

576 கிராம் நகையோடு பயணம்…! நள்ளிரவில் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அரசு ஏசி பஸ்சில் நடந்த துணிகரம்…. போலீஸ் விசாரணை…!!

Published

on

கோவை இடையர்வீதி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், அங்குள்ள ஒரு பிரபல நகைக்கடையில் ஐந்து வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். புதிய வடிவமைப்பு நகைகளைத் திருவண்ணாமலையில் உள்ள கடைகளுக்குக் காண்பித்து வியாபாரம் செய்வதற்காக, 41 தங்க பிரேஸ்லெட்டுகளுடன் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

அங்கு புதிய நகைகள் எதுவும் விற்பனையாகாத நிலையில், சில கடைகளில் பழைய நகைகளை இவரிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர். இதையடுத்து, புதிய மற்றும் பழைய நகைகள் என மொத்தம் 596 கிராம் சுமார் 75 பவுன் தங்கம் அடங்கிய பையுடன் கோவை திரும்புவதற்காக, அன்று இரவு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்ட அரசு ஏசி சொகுசு பேருந்தில் பிரபு ஏறியுள்ளார்.

Advertisement

நள்ளிரவு 1.30 மணியளவில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் மார்க்கெட் அருகே டீ குடிப்பதற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டபோது, பையைத் தனது இருக்கையிலேயே வைத்துவிட்டு பிரபு கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, இருக்கையில் இருந்த நகைப்பை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அவர் உறைந்துபோனார்.

அதே நேரத்தில், அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரு நபர்களும் மாயமாகியிருந்தது தெரியவந்தது. செங்கம் பகுதியில் பேருந்து நின்றபோது ஏறிய மர்ம நபர்கள் இருவர்தான், பிரபு டீ குடிக்கச் சென்ற சில நிமிடங்களைப் பயன்படுத்திக் கொண்டு நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பியோடியுள்ளனர் என்பதை உறுதி செய்த காரிப்பட்டி காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in