கமல்ஹாசன் நடித்த டைட்டிலில் புதிய படத்தில் ஹீரோவாக கமிட் ஆன இளம் நடிகர், படப்பிடிப்பு துவக்க விழா பூஜை நடந்த இடம் அதுவா? ஆச்சரியத்தில் வாய் பிளந்த ரசிகர்கள்! – cinefeeds
Connect with us

CINEMA

கமல்ஹாசன் நடித்த டைட்டிலில் புதிய படத்தில் ஹீரோவாக கமிட் ஆன இளம் நடிகர், படப்பிடிப்பு துவக்க விழா பூஜை நடந்த இடம் அதுவா? ஆச்சரியத்தில் வாய் பிளந்த ரசிகர்கள்!

Published

on

actor kavin

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். ஏற்கனவே அவர் சில படங்கள் நடித்திருந்த நிலையில் அவருக்கு டாட்டா மற்றும் லிப்ட் ஸ்டார் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. இப்போது அவர் தண்டட்டி படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அந்த படத்துக்கு பேர் சொல்லும் பிள்ளை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பேர் சொல்லும் பிள்ளை என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த படத்தின் துவக்க விழா பூஜையை ஏவிஎம் ஸ்டுடியோ கார்டனில் இந்த படக்குழு நடத்தியிருக்கிறது. மேலும் இந்த படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்யவும் படக்குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in