பாக்யராஜின் எதிர்பாராத மறைவு கலையுலகை அதிர வைக்கிறது, பாதியில் பயணப்பட்டு விட்டாரே? கவிஞர் வைரமுத்து செலுத்திய அஞ்சலி! – cinefeeds
Connect with us

CINEMA

பாக்யராஜின் எதிர்பாராத மறைவு கலையுலகை அதிர வைக்கிறது, பாதியில் பயணப்பட்டு விட்டாரே? கவிஞர் வைரமுத்து செலுத்திய அஞ்சலி!

Published

on

Director K Bhagyaraj

கடந்த 10ம் தேதி தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைந்தார். அவரது மறைவுக்கு பின் 17 நாட்களில் அவரது சிஷ்யர் கே பாக்யராஜூம் மறைந்து விட்டார். குருவை தொடர்ந்து சீடனும் சென்று விட்டார். இயக்குனர் கே பாக்யராஜ் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, பதினேழே நாட்களில் இன்னோர் இடியா? பாரதிராஜாவைப் புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்குத் தீ மூட்டுவதா? என்ன கொடுமை இது!

பாக்யராஜ் ஈடு இணையற்ற கலைஞன். அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத்
திரைக்கதையில் இட்டு அதைத் தான்மட்டுமே அவிழ்க்கத் தெரிந்தவர். அவர் உருவம் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார் அவர் குரல் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார். நகைச்சுவைக்கென்று அவர் தனித்தடம் தயாரிப்பதில்லை; கண்ணின் பாகமான இமைபோல திரைக்கதையில் நகைச்சுவையை இழைத்து விடுவார்.

Advertisement

80களில் தமிழ் சினிமாவை நோக்கிவந்த ஒவ்வொரு கிராமத்து இளைஞனுக்கும்
நம்பிக்கை கொடுத்தவர் பாக்யராஜ். எம்.ஜி.ஆர் அவரைத் தன் வாரிசு என்றார். பாக்யராஜின் எதிர்பாராத மறைவு கலையுலகை அதிரவைக்கிறது. வாழ்ந்திருக்க வேண்டிய கலைஞன் அய்யா நீ! பாதியில் பயணப்பட்டு விட்டாயே! உன் உயிர் அமைதி அடைக! ஆழ்ந்த இரங்கல் அனைவருக்கும் என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in