CINEMA
எதுக்காக எப்பவும் கவலையோட இருக்கணும்? நடிகர் சூர்யா சொல்ற இந்த ஒரு விஷயத்தை கேளுங்க… அடேங்கப்பா இது வேற லெவலா இருக்குதே என பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!
இன்றைய மனித சமூகத்தில் யாராவது நண்பர்கள் உறவினர்கள் காயப்படுத்தும் விதமாக பேசிவிட்டால் அதற்காக நாள்கணக்கில் வாரக்கணக்கில் சிலர் அப்செட்டாக இருந்து விடுகின்றனர். அதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா நல்ல ஒரு ஆலோசனையை கூறியிருக்கிறார். நடிகர் சூர்யா கூறியதாவது, உங்க பேங்க் அக்கவுண்ட்டுல இருக்கிற 86,400 ரூபாயில் யாராவது 10 ரூபாய் எடுத்து விட்டால் மீதி பணத்தை அப்படியே தூக்கி வீசிடுவீங்களா? வீச மாட்டீங்கல்ல.
அதேபோல தான் ஒரு நாளில் 86,400 நொடிகள் உள்ளது. யாரோ ஒருத்தர் 10 செகண்ட் உங்களை காயப்படுத்திட்டாங்கன்னு உங்களுடைய ஒட்டுமொத்த நாளையும் நினைத்து நினைத்து வீணடிச்சிடாதீங்க. அந்த நெகட்டிவிடியை கடந்து எப்போதும் பாசிட்டிவா இருங்கள். அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்க என்று நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறியிருக்கிறார். உண்மையிலேயே இது பெரிய தத்துவம்தான் என்று ரசிகா்கள் நடிகர் சூர்யாவை பாராட்டி வருகின்றனர்.
