CINEMA
ஒரே மாதத்தில் 2 ராஜாக்களை இழந்து விட்டோம்…. இயக்குனர் கே பாக்யராஜ் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!
இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மறைவு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அவருடன் நடித்த பழகிய திரையுலக நடிகர் நடிகைகளுக்கும் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது. நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நெருக்கமான நட்பில் இருந்தவர். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் ரஜினி கமலுக்கு உதவி இயக்குனராக நடிப்பு சொல்லிக் கொடுத்து டயலாக் பேச வைத்தவர் கே பாக்யராஜ் தான்.
பாரதிராஜா கடந்த 10ம் தேதி மறைந்த நிலையில் 17 நாட்களில் அவரது சீடர் கே பாக்யராஜூம் மறைந்து விட்டார். நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது வலைதள பதிவில், கே பாக்யராஜ் என்கிற எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது பதிவில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
