LATEST NEWS
கொடுமை..! ஜலதோஷத்திற்கு மருத்துவம்… மூக்கு சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றிய மருத்துவர் – 19 மாதக் குழந்தையின் கண் பார்வை பறிபோனது..!!
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியத்தால் 19 மாதக் ஆண் குழந்தையின் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வினய் விஸ்வகர்மா என்ற அந்த குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான சளி, இருமல் மற்றும் கண் சிகப்பு நிறம் காரணமாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த அரசு மருத்துவர், சளிக்காகத் தர வேண்டிய மூக்கு சொட்டு மருந்தை மாற்றி குழந்தையின் இரண்டு கண்களிலும் ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
மருந்து ஊற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தையின் கண்கள் வீங்கி நிலைமை மோசமானதால், பெற்றோர் அவரை மேல் சிகிச்சைக்காக போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த நிபுணர்கள், தவறான சிகிச்சையினால் குழந்தையின் பார்வைத்திறன் முற்றிலும் பறிபோய்விட்டதாகவும், இனி சரிசெய்ய முடியாது என்றும் உறுதிப்படுத்தினர். குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
