4 நாட்களில் 2-வது முறை..! உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து பயங்கரம்.. வயல்வெளியில் அவசரமாக விழுந்து நொறுங்கிய விமானம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

4 நாட்களில் 2-வது முறை..! உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து பயங்கரம்.. வயல்வெளியில் அவசரமாக விழுந்து நொறுங்கிய விமானம்..!!

Published

on

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து ‘சேட்டக் ஏவியேஷன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘செஸ்னா 152’ என்ற சிறிய ரக பயிற்சி விமானம் நேற்று தனியாகப் பறக்கும் பயிற்சிக்காகப் புறப்பட்டது. இந்த விமானத்தை 28 வயதுடைய பெண் பயிற்சி விமானி ஒருவர் இயக்கி வந்த நிலையில், கஸ்கஞ்ச் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அவசரமாகத் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஒரு விரைவுச் சாலையின் ஓரத்தில் அமைந்திருந்த வயல்வெளியில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பெண் விமானி எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பாக உயிர் தப்பினார்.

ஒற்றை என்ஜின் கொண்ட இந்த இரு இருக்கை பயிற்சி விமானத்தின் அவசர தரையிறக்கம் குறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களில் பயிற்சி விமானங்கள் சம்பந்தமாக நடக்கும் இரண்டாவது விபத்துச் சம்பவம் இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஜூன் 26-ஆம் தேதி கான்பூர் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்றின் சுழலும் புரொப்பெல்லர் (Propeller) இறக்கை தாக்கியதில் மற்றொரு பயிற்சி விமானி படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in