LATEST NEWS
ஷாக் ..! 4 குழந்தைகளின் தாயைக் கொன்று.. கறியை பாஸ்தாவுடன் சேர்த்து சாப்பிட்ட கொடூரம்… ஆனால் குற்றவாளிக்கு பரோல் மறுப்பு.. என்ன காரணம்..? வெளியான அதிர்ச்சி பின்னணி..!!
1998 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில், நான்கு குழந்தைகளின் தாயான ஜூலி பேட்டர்சன் (32) என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளியான 24 வயது டேவிட் ஹார்க்கர் (தற்போது வயது 51), அப்பெண்ணைக் கொலை செய்த பிறகு அவரது உடலின் தொடைப் பகுதியை வறுத்து, பாஸ்தா மற்றும் சீஸுடன் சேர்த்துச் சாப்பிட்டதாகத் தனது நண்பர்களிடமும் மனநல மருத்துவரிடமும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஜூலி பேட்டர்சனின் உடலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, டேவிட் ஹார்க்கருக்குக் கடுமையான மனநிலை பிறழ்வு இருந்ததை மனநல மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால், குறைக்கப்பட்ட பொறுப்புணர்வுஅடிப்படையில் அவர் மீதான கொலைக்குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு முதல் அவர் பரோல் (Parole) கோரி விண்ணப்பிக்கத் தகுதி பெற்றார்.
சிறையில் இருக்கும் ஹார்க்கரின் நடத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கைக் குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் சிறைத்துறை அறிக்கை கூறுகிறது. இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவரை விடுவிப்பதோ அல்லது திறந்தவெளிச் சிறைக்கு மாற்றுவதோ பாதுகாப்பானது அல்ல என பரோல் வாரியம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக, தற்போது ஒன்பதாவது முறையாக அவரது பரோல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
