LATEST NEWS
இந்தியர்களுக்கு வெட்கக்கேடு! மலைப்பாதையில் பறந்து வந்த பாட்டில்.. பொங்கியெழுந்த வெளிநாட்டவர்.. இணையத்தில் வெடிக்கும் விவாதம்..!
இந்தியாவின் மலைப்பகுதி ஒன்றில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைப்பாதையில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், எந்தவித சமூக அக்கறையும் இன்றி காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வெளியே சாலையில் வீசினார். இது சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள அழகிய சூழலையும் கெடுக்கும் ஒரு பொறுப்பற்ற செயலாகும்.
இதனைப் பார்த்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், அதை அப்படியே கடந்து செல்ல விரும்பவில்லை. தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, கீழே கிடந்த அந்தப் பாட்டிலை எடுத்த அவர், நேராக காரில் இருந்தவர்களிடம் சென்று அதை மீண்டும் உள்ளேயே வீசினார். மேலும், பொது இடத்தில் குப்பை வீசியதற்காக அவர்களைக் கடுமையாக விமர்சித்தார். நமது நாட்டின் தூய்மையை ஒரு வெளிநாட்டவர் வந்து சொல்லிக் கொடுக்கும் நிலை குறித்து இணையத்தில் பலரும் காரில் இருந்தவரை விமர்சித்தும், அந்தச் சுற்றுலாப் பயணியின் செயலைப் பாராட்டியும் வருகின்றனர்.
