LATEST NEWS
“இங்கே விளையாட கூடாது” வெளிநாட்டு உணவகத்தில் இந்தியர்களுக்கு நேர்ந்த அவமானம்… ஆத்திரத்தில் தந்தை செய்த செயல்…. இணையதளத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சி…!!
வியட்நாமின் ஹோ சி மின் நகரில் செயல்பட்டு வரும் ‘பம்பாய் பைட்ஸ்’ என்ற இந்திய உணவகத்தில், இந்தியக் குடும்பத்தினர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்திற்கு வந்திருந்த அக்குடும்பத்தின் குழந்தை, அங்கிருந்த டிஷ்யூ தாள்களை எடுத்து அங்கும் இங்கும் வீசியுள்ளது. இதனைத் தவிர்க்குமாறு ஊழியர்கள் கண்ணியமாக அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் தந்தை, மேஜையில் இருந்த பொருட்களைக் கீழே வீசி எறிந்து சேதப்படுத்தினார். மேலும், அவர் உணவக ஊழியர்களைத் தள்ளிவிட்டு அத்துமீறலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த அநாகரிகச் சம்பவம் குறித்து உணவக உரிமையாளர் ஐஸ்வர்யா கன்னா சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “உணவகம் என்பது விளையாட்டு மைதானம் அல்ல; ஊழியர்கள் மீது தங்களது அதிகாரத்தையும் கோபத்தையும் காட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குழந்தைகளுக்கு அடிப்படை நாகரிகத்தையும், பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உணவகத்தின் சிசிடிவி ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் தரப்பு விளக்கம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
