CINEMA
“என் தந்தை அன்று செய்த விஷயம்” CM விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய மகன் ஜேசன் சஞ்சய்…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!!
நடிகர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இடையேயான உறவுமுறை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு, சமீபத்திய வைரல் வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜய்-சங்கீதா விவாகரத்து செய்திகளின்போது, சஞ்சய் தந்தையின் இனிஷியலை மாற்றியதாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள வீடியோ இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அனைத்தையும் பொய்யாக்கியுள்ளது.
வைரலான அந்த வீடியோவில், ஜேசன் சஞ்சய் சிறுவயதில் பள்ளி முடிந்து வெளியே வரும்போது, ரசிகர் ஒருவர் தன்னைத் தூக்கியதால் பயந்து அழுது, பின்னர் தந்தை விஜய் வந்து காரில் ஏற்றிய நினைவலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை சஞ்சய் அன்புடன் நினைவு கூர்ந்தது, அவர்கள் இருவருக்குள்ளும் எந்தப் பிரிவும் இல்லை என்பதை உணர்த்துவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் இயக்குநராகத் தனது முதல் திரையுலகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார், இப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகத் தயாராகி வருகிறது. தந்தையைப் பற்றிய பாசப் பேச்சு மற்றும் இயக்குநராக அவரது புதிய படம் என ஜேசன் சஞ்சய் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
