LATEST NEWS
“அட அது இல்லப்பா இது” தொட்டவங்களை விடமாட்டேன்னு சொன்னது இதுதானா..? விஜய்யை கிழித்து தொங்கவிட்ட அறப்போர் இயக்கம்…!!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்ததை முன்வைத்து, ஊழலுக்கு எதிரான அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் தவெக தலைமைக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “மக்கள் பணத்தைத் தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்று உறுதியளித்துப் பேசியிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வியக்கம், குட்கா ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு போன்ற பல தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஒருவரை கட்சியில் சேர்த்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்தபோது மாதா மாதம் குட்கா நிறுவனத்திடம் இருந்து ₹14 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதையும், லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது ₹35 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதையும் அறப்போர் இயக்கம் தனது பதிவில் விரிவாகக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது. மேலும், கனிம வளக் கொள்ளை மற்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா ஆகியவற்றிலும் விஜயபாஸ்கருக்கு உள்ள தொடர்புகளைச் சுட்டிக்காட்டி, “தொட்டவர்களை விடமாட்டேன் என்று சொன்னது இதுதானா?” என காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
