நீங்க தான் உங்க குடும்பத்தின் கடைசி முதலமைச்சர்…. குடும்பத்தோட லண்டனுக்கு போய் செட்டில் ஆகுங்க… திமுக-வை வறுத்தெடுத்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீங்க தான் உங்க குடும்பத்தின் கடைசி முதலமைச்சர்…. குடும்பத்தோட லண்டனுக்கு போய் செட்டில் ஆகுங்க… திமுக-வை வறுத்தெடுத்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..!!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திலிருந்து அவர்தான் கடைசி முதலமைச்சர் என்று தவெக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் தவெக-வில் இணையும் விழாவில் பேசிய அவர், திமுகவின் சதிச் செயல்களால்தான் காவல்துறை ஒத்துழைப்பு கிடைக்காமல், தவெக தலைவர் விஜய் பல இடங்களில் பிரசாரம் செய்ய முடியாமல் போனது என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக 14 மாவட்டங்களில் திட்டமிட்டு கூட்ட நெரிசலை ஏற்படுத்த சதி தீட்டப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்திற்குப் பின், திமுக தங்களின் பரம எதிரியாகிவிட்டது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பிரகடனப்படுத்தினார். கரூரில் திட்டமிட்டு சூழ்ச்சி செய்து மக்களைக் கொன்று குவித்த பாவத்தினால்தான் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியைத் தழுவினார் என்றும், தேர்தல் முடிவுக்குப் பின் அவர் கண்ணீர் விட்டார் என்றும் சுட்டிக்காட்டினார். இனிமேல் ஸ்டாலின் குடும்பத்தினர் லண்டனுக்குச் சென்றுதான் செட்டில் ஆக வேண்டும் என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டார்.

Advertisement

மேலும், தவெக வேட்பாளர்கள் ஒருவரைக் கூட திமுகவால் விலைக்கு வாங்க முடியவிலை என்று பெருமிதம் தெரிவித்த அவர், தவெக தேர்தலைக் கண்டு ஒருபோதும் அஞ்சாது என்றார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலின் போது மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து திமுக-அதிமுக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள் என்ற ஒரு புதிய அரசியல் கணிப்பையும் அவர் இந்த மேடையில் வெளியிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in