LATEST NEWS
குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய்தான்…! தமிழக அரசியலில் வெடித்த புது சர்ச்சை..!!!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் விஜய் மீது கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய்தான் என்று அவர் நேரடியாகச் சாடியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவினர் இணைவது குறித்துப் பேசிய டிடிவி தினகரன், அமமுக வேட்பாளரை பேரம் பேசியதே விஜய் ஆட்சியில் குதிரை பேரம் நடப்பதற்கு மிக முக்கியச் சாட்சி என்று சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித் தாவல்களையும், அதற்குப் பின்னால் இருக்கும் பேரங்களையும் அவர் இந்த அறிக்கையின் மூலம் கடுமையாகத் தட்டிகேட்டுள்ளார்.
மேலும், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் விஜய் தங்களது பதவியை விலகச் சொன்னது அப்பட்டமான குதிரை பேரம் ஆகும் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
