LATEST NEWS
ஈரானில் அதிரடி திருப்பம்: சொந்த தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்காத புதிய உச்ச தலைவர்.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூலை 4 முதல் தெஹ்ரானில் பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ளன. ஜூலை 8 வரை ஈரானின் முக்கிய நகரங்களில் இந்த இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு, இறுதியாக ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான மஷ்ஹாரில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்திய அரசின் சார்பில் பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், மறைந்த தலைவரின் மகனும், ஈரானின் தற்போதைய புதிய உச்ச தலைவருமான மொஜ்தபா காமேனி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக நேரில் கலந்து கொள்ள மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரணச் சூழலில் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று உளவுத்துறையும் பாதுகாப்புப் படையினரும் எச்சரித்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் மொஜ்தபா காமேனி இதுவரை ஒருமுறை கூட பொதுவெளியிலோ அல்லது வீடியோவிலோ தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்று மக்களோடு துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பிய போதிலும், அச்சுறுத்தல்கள் காரணமாகப் பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி அவர் இந்நிகழ்வைத் தவிர்க்கிறார்.
