LATEST NEWS
“விரதம் இருக்கேன் அதனால வேண்டாம்” தாம்பத்தியத்தை தள்ளிப்போட்ட மனைவி… தாடியை ஷேவிங் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி… அதிர்ச்சியில் உறைந்த கணவன்..!!
குஜராத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பியூஷ் என்பவருக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக ‘பூனம்’ என்ற பெயரில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது, விரதம் இருப்பதாகக் கூறி பூனம் தொடர்ந்து தாம்பத்திய உறவைத் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் பூனம் ரகசியமாக முகச்சவரம் (ஷேவிங்) செய்வதை பியூஷ் தற்செயலாகக் கண்டு அதிர்ச்சியடைந்தார். விசாரணையில், அவர் பெண் அல்ல என்பதும், ‘சந்தன்’ என்ற பெயருடைய ஓரினச்சேர்க்கை ஆண் என்பதும் பியூஷுக்குத் தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பியூஷ், உடனடியாக சந்தனை பிரிந்து தனியாகச் சென்றுவிட்டார்.
ஆனால், சந்தன் பியூஷை விடாமல் துரத்திச் சென்று தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடுமையான ஆத்திரமடைந்த பியூஷ், சந்தனை கொடூரமாகக் கொலை செய்தார். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியான பியூஷைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
