LATEST NEWS
சிரிப்பை அடக்க முடியாது..! அடிக்காமல் செஞ்ச அதிரடி ட்ரீட்மெண்ட்… நள்ளிரவில் சிக்கிய கொள்ளையர்களுக்கு கொடுத்த வினோத தண்டனை… ‘டெலிடப்பீஸ்’ அவதாரம்..!!
இந்தோனேசியாவில் தொடர்ந்து நடந்து வந்த திருட்டுச் சம்பவங்களால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருடர்களைப் பிடித்து ‘மமி’ போல டக்ட் டேப் மூலம் சுற்றிய வினோதமான தண்டனை வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவின் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் நான்கு திருடர்கள் திருடும் நோக்கில் நள்ளிரவில் நுழைந்துள்ளனர். தொடர் திருட்டுகளால் ஏற்கனவே உஷாராக இருந்த கடையின் உரிமையாளரும் அப்பகுதி மக்களும், அங்கு திருடர்களைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.பிடிபட்ட திருடர்கள் தப்பியோடி விடக்கூடாது என்பதற்காக, பொதுமக்கள் அவர்களை அடிக்காமல் ஒரு நூதனமான வழியைக் கையாண்டுள்ளனர். ஆரஞ்சு நிற டக்ட் டேப்பைக் கொண்டு அந்தத் திருடர்களின் தலை முதல் கால் வரை அசைய முடியாதபடி முழுமையாகச் சுற்றிப் பிணைத்துள்ளனர். மேலும், வினோதமாக அவர்களின் தலைப்பகுதியில் கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போல டேப்பால் காதுகளை வடித்துள்ளனர். இதனால் அவர்கள் பார்ப்பதற்கு ‘டெலிடப்பீஸ்’ கார்ட்டூன் போலவும், எகிப்திய மமிகள் போலவும் மாறியதால் இந்த வீடியோ இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் திருடர்களை அடிக்காமல், சட்டத்தைக் கையில் எடுக்காமல் பாதுகாப்பாகக் கட்டிப்போட்ட பொதுமக்களின் ஐடியாவைப் பாராட்டி வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, இது மனித உரிமை மீறல் என்றும், திருடர்களாக இருந்தாலும் பொதுவெளியில் இப்படி அவமானப்படுத்துவது சட்டப்படி தவறு என்றும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ, இந்தோனேசியத் திருடர்களின் இந்த ‘கார்ட்டூன்’ லுக் தற்பொழுது உலகளவில் டிரெண்டாகி வருகிறது
.https://www.instagram.com/reel/DaUCmdeo0lD/?utm_source=ig_web_button_share_sheet
