LATEST NEWS
“அம்மா உன்ன ஒருநாள் ஹெலிகாப்டர்ல கூட்டிட்டு போவேன்” சிறுவயதில் கொடுத்த வாக்குறுதி… கனவை நிறைவேற்ற தாயை முதல்முறையாக ஹெலிகாப்டரில் பறக்கவிட்ட பாசக்கார மகன்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!
மும்பையில் வசித்து வரும் சமூக ஊடக உள்ளடக்கப் படைப்பாளரான (Content Creator) யோகேஷ் ராவத், சிறு வயதில் தனது தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவரை முதன்முறையாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இந்த உணர்வுப்பூர்வமான பயணத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் இதயங்களையும் வென்று வருகிறது.
https://www.instagram.com/reel/DaUTv2pzfOI/?utm_source=ig_web_button_share_sheet
வீடியோவின் தொடக்கத்தில் காரில் பயணிக்கும் யோகேஷ், தான் சிறுவனாக இருந்தபோது தன் தாயை ஒரு நாள் கண்டிப்பாக ஹெலிகாப்டரில் அமர வைப்பேன் என்று கூறியதை நினைவு கூர்கிறார். முதன்முறையாக ஹெலிகாப்டரை அருகில் பார்த்தவுடன் அவரது தாய் சற்றே பதற்றமடைந்து பயந்தபோதிலும், யோகேஷ் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு தைரியமளித்து அழைத்துச் செல்கிறார். ஹெலிகாப்டர் வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தாயின் பயம் மறைந்து, அவர் ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த பசுமையான காடுகள் மற்றும் மலைகளின் அழகிய காட்சிகளைக் கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான இணையவாசிகள் யோகேஷின் இந்த அன்பான முயற்சிக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தாயின் முகத்தில் முதலில் தெரிந்த பயம் பின்னர் பேரானந்தமாக மாறிய தருணமே இந்த வீடியோவின் ஆகச்சிறந்த அழகு என்று பலரும் நெகிழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மகனும், மகளும் தங்களது பெற்றோரின் சிறு வயதுக் கனவுகளையும் ஆசைகளையும் இதுபோல நிறைவேற்ற முயல வேண்டும் என்று இந்த வீடியோ பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
