LATEST NEWS
யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! தவெகவில் இணைகிறார் ஓபிஎஸ்..? சற்றுமுன் முடிவை மாற்றினார்..!!
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாக அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இணைந்தும் இதுவரை தங்களுக்குப் பொருத்தமான பதவிகள் வழங்கப்படாததால், அவர்கள் இந்த மாற்றுப் பரிசீலனையை ஓபிஎஸ் முன்னிலையில் வைத்துள்ளனர். இருப்பினும், திமுகவில் தனக்கு விரைவில் உரிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறி, தவெகவில் இணையும் முடிவை ஓபிஎஸ் தற்போதைக்கு மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைவரின் இந்த முடிவால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் தற்போது தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், ஓபிஎஸ் மறுத்த போதிலும் அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் (OPR) தவெகவில் இணையும் முடிவில் தீவிரமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து மாற்றுக்கட்சித் தலைவர்களின் வாரிசுகள் தவெகவில் இணைந்து வரும் சூழலில், இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
