LATEST NEWS
தவெக-வின் ‘டார்கெட் 118’.. ராக்கெட் வேகத்தில் குதிரை பேரம்..? அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்ட அதிரடி குண்டு…!!
தமிழக அரசியலில் ‘மேஜிக் எண் 118’ என்ற இலக்கை எட்டுவதற்காகத் தமிழக வெற்றிக் கழகம் ராக்கெட் வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான இந்த எண்ணிக்கையைப் பிடிக்கத் தவெக தீவிரமாக காய்களை நகர்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . இந்த விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது .
ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், தங்களது பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தவெக எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற தொனியில் அதிமுக தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்கத் தவெக திரைமறைவில் பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் பரபரப்பான விவாதங்களையும் கிளப்பியுள்ளது .
