LATEST NEWS
“நான் விடைபெறுகிறேன்” கண்ணீருடன் முடிந்த சகாப்தம்.. உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுகல் அவுட்… மைதானத்திலேயே கதறி அழுத ரொனால்டோ..!!
ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய இந்தச் சுற்றின் இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில், ஸ்பெயின் அணியின் மாற்று வீரர் மிக்கேல் மெரினோ அடித்த ஒரு கோல் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் ஸ்பெயின் அணி, 2010 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு முதன்முறையாக மீண்டும் உலகக் கோப்பை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து உலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கால்பந்து வாழ்க்கை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. இந்தத் தொடர்தான் தனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆட்டத்தின் இறுதி விசிலுக்குப் பிறகு, 41 வயதான ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீரை அடக்க முடியாமல் உடைந்து அழுதது அங்கிருந்த ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனைக்குரியவரான ரொனால்டோ, 2006-ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி வருகிறார். டல்லாஸ் மைதானத்தில் சோகத்துடன் காணப்பட்ட அவருக்கு, போர்ச்சுகல் சக வீரர்களும் ரசிகர்களும் ஆறுதல் கூறினர். போர்ச்சுகலைத் வீழ்த்திய ஸ்பெயின் அணி, அடுத்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா அல்லது பெல்ஜியம் அணியுடன் மோதவுள்ளது.
