LATEST NEWS
தவெகவில் இணையும் நடிகை த்ரிஷா..? முக்கிய பதவியை தூக்கிக்கொடுக்கும் CM விஜய்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரபல நடிகை திரிஷா களமிறங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த விவாதம் எழுந்துள்ளது. தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துள்ளார். இதனால் அங்கு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், நடிகை திரிஷாவை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து, அவரை இத்தொகுதியில் போட்டியிட வைக்க கட்சித் தலைமை திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக, இதே தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடக்கூடும் என்ற தகவல் பரவிய போது, நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் தர்மத்தின் அடிப்படையில், தான் அங்கு போட்டியிடப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்து வீடியோ வெளியிட்டிருந்தார்
