LATEST NEWS
BREAKING: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!!
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் இனி ‘சமூக நீதித்துறை’ என மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் இத்துறையின் பெயர் மாற்ற நடவடிக்கையானது, சமத்துவத்தை நிலைநிறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் இந்த புதிய பெயர் மாற்றத்தை முழுமையாகக் கொண்டு வரும் வகையில், தமிழ்நாடு வணிக விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச விடுதிகள் மற்றும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும் இத்துறை இனி புதிய பெயருடன் தனது சேவைகளைத் தொடரும்
