ஆட்சியை கவிழ்க்க ரூ.50 கோடி பேரம்..? விஜய் அரசுக்கு வந்த ஆபத்து… திமுக மீது தவெக எம்.எல்.ஏ-க்கள் பகிரங்க புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆட்சியை கவிழ்க்க ரூ.50 கோடி பேரம்..? விஜய் அரசுக்கு வந்த ஆபத்து… திமுக மீது தவெக எம்.எல்.ஏ-க்கள் பகிரங்க புகார்..!!

Published

on

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்துள்ள புகார், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்களான ஊத்தங்கரை இளையராஜா மற்றும் ஸ்ரீவைகுண்டம் சரவணன் ஆகியோர், தங்களை தலா 30 முதல் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசி ராஜினாமா செய்ய வைப்பதற்கான முயற்சிகள் நடந்ததாக அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

இந்த குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் ஆளும் திமுகவைச் சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தவெக எம்.எல்.ஏ-க்கள் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த மேலும் இரண்டு தவெக எம்.எல்.ஏ-க்களிடமும் இதே போன்ற முறையில் கட்சி மாறக்கோரி பேரப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக தவெக தரப்பு கொதித்தெழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள இந்த பணப் பேரப் புகார், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in