LATEST NEWS
460 அடி உயரத்தில் திக் திக்..! ட்ரோனில் சாண்ட்விச்..இளைஞனின் செயலால் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல்…!!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள 460 அடி உயரமான போல்ட் பாலத்தின் கோபுரத்தில் 22 வயதான ஜாக் கிப்சன் பரல் என்ற இளைஞர் ஏறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அங்கு அவர் ‘பாம் தி பேர்ட்’ என்ற கார்ட்டூன் பறவையின் உருவத்தை வரைந்ததோடு, நாட்டில் வரிகளை குறைக்க வேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோரிக்கை விடுத்தார். மேலும், இவ்வளவு உயரத்தில் இருந்தபடியே தனக்கு ட்ரோன் மூலமாக பீனட் பட்டர் சாண்ட்விச் மற்றும் பால் வேண்டும் என நூதனமான முறையில் கேட்டு அதிகாரிகளை திக்குமுக்காடச் செய்தார். இச்சம்பவத்தால் அந்த பாலத்தின் வழித்தடம் மூடப்பட்டு அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவானது.
காவல்துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், சுமார் 9 மணி நேரமாக கீழே இறங்க மறுத்து கோபுரத்தின் உச்சியிலேயே அடம் பிடித்த அந்த இளைஞர், இறுதியில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வரைந்த அந்த குறிப்பிட்ட கார்ட்டூன் பறவையின் உருவம் ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே அந்நாட்டின் பாரம்பரிய மிக்க ரயில் நிலையம் உள்ளிட்ட பல முக்கியக் கட்டடங்களில் இதுபோன்ற வரைபடங்கள் வரையப்பட்டதற்காகப் கடந்த ஆண்டு பலரை காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
