LATEST NEWS
CM விஜய்க்கு ஷாக்..! 100 கிலோ குட்காவுடன் தவெக நிர்வாகி கைது… இரவோடு இரவாக 3 பேர் அதிரடி கைது…!!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் கக்கன் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் பதுக்கப்பட்டு இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சுமார் 30 கிலோ விமல் பாக்கு மற்றும் 70 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கையும் களவுமாகக் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனை தொடர்பாக தவெக நிர்வாகியான சந்துரு, அவரது தந்தை ஆறுமுகம் மற்றும் மற்றொரு நபர் உட்பட மொத்தம் 3 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாகப் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், கடுமையான கொள்கை நிலைப்பாடுகளையும் முன்னெடுத்து வரும் வேளையில், அக்கட்சியின் அடிமட்ட மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தொடர்ந்து இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்சாட்டுகளில் சிக்கி வருவது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
