மாப்பிள்ளை யார் தெரியுமா? திடீர் திருமணம்!பிரபல இயக்குனரை 2-வதாக கரம்பிடித்த நடிகை ஸ்வாதி!வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!! – cinefeeds
Connect with us

CINEMA

மாப்பிள்ளை யார் தெரியுமா? திடீர் திருமணம்!பிரபல இயக்குனரை 2-வதாக கரம்பிடித்த நடிகை ஸ்வாதி!வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!!

Published

on

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. இதைத்தொடர்ந்து ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’ போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு விகாஸ் வாசு என்ற விமானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் தனது சொந்த வாழ்க்கையை ரகசியமாகவே வைத்திருந்த ஸ்வாதி, மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இந்த நிலையில், நடிகை ஸ்வாதி தற்போது திடீரென தனது இரண்டாவது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘மன்த் ஆஃப் மது’ என்ற படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் நகோதியைத் தான் அவர் தற்போது கரம்பிடித்துள்ளார். அந்தப் படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. மிகவும் எளிமையான முறையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. ஸ்வாதி மற்றும் ஸ்ரீகாந்த் ஜோடியாக இருக்கும் இந்த அழகிய திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இந்த புதிய தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in