என்ன ஆச்சு தெரியுமா? 17 வயது சிறுவனின் கடைசி ஆசை..நேரில் சென்று வாக்குறுதி அளித்த பவன் கல்யாண்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன ஆச்சு தெரியுமா? 17 வயது சிறுவனின் கடைசி ஆசை..நேரில் சென்று வாக்குறுதி அளித்த பவன் கல்யாண்..!!

Published

on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் தீவிர ரசிகர் 17 வயது சிறுவன் நிரஞ்சன். அரியவகை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தபடியே பவன் கல்யாண் பாடல்களுக்கு நடனமாட முயன்ற இந்த சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த பவன் கல்யாண், நேரடியாக சிறுவனின் வீட்டிற்கே சென்று நெகிழ்ச்சியூட்டும் சர்ப்ரைஸ் கொடுத்தார். அவனுக்குத் தேவையான நிதியுதவி, திருப்பதி பிரசாதம் மற்றும் அவனது ஆசைப்படி ஒரு நாய்க்குட்டியையும் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தியதுடன், தனது அடுத்த திரைப்படத்தை இருவரும் இணைந்து திரையரங்கில் பார்க்கலாம் என்றும், அவன்தான் தனது ‘ஸ்பெஷல் கெஸ்ட்’ என்றும் உறுதியளித்தார்.

பவன் கல்யாணின் இந்த வாக்குறுதியால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த சிறுவன் நிரஞ்சன், அவருடன் படம் பார்க்கும் அந்த சிறப்பான நாளுக்காக ஆவலோடு காத்திருந்தான். ஆனால், எதிர்பாராத விதமாக அவனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். தனக்குப் பிடித்தமான நடிகரை நேரில் பார்த்த சந்தோஷம் அவனுக்குக் கிடைத்தாலும், அவருடன் இணைந்து படம் பார்க்க வேண்டும் என்ற அவனது அந்த கடைசி ஆசை நிறைவேறாமலேயே போனது அவனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in