“கரூரில் தவெக-வின் மாஸ் ரோடுஷோ!.. 32 குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கப் போகும் அந்த ‘ஒரு’ முக்கிய ஆணை.. முதல்வர் விஜய்யின் ‘மெகா’ பிளான்”..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கரூரில் தவெக-வின் மாஸ் ரோடுஷோ!.. 32 குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கப் போகும் அந்த ‘ஒரு’ முக்கிய ஆணை.. முதல்வர் விஜய்யின் ‘மெகா’ பிளான்”..!!

Published

on

நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சோகத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் நாளை கரூர் செல்கிறார். காலை 9:30 மணிக்குத் தனி விமானம் மூலம் அங்கு செல்லும் அவர், கரூர்-சேலம் பைபாஸ் அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

இந்தத் துயரத் தணிப்பு நிகழ்வுகளுக்குப் பின், கரூரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ரூ.1,700 கோடி மதிப்பிலான எவர்வான் கோத்தாரி காலணி தயாரிப்பு என்ற தனியார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 13,500 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூரில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் விஜய் ரோடுஷோ நடத்தத் திட்டமிட்டுள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in